கொரோனா வைரஸ் வந்ததில் இருந்து மூன்று மாதங்களாக உலக நாடுகளே முடங்கிப் போய் கிடக்கிறது. இன்னும் முழுமையாக வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

இதனால் கேரளா அரசு ஆன்லைன் வகுப்பு மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த ஒரு இணையதளத்தை வெளியிட்டுள்ளது.

அதில் ஒன்றாம் வகுப்புக்கு பாடம் நடத்திய ஸ்வேதா என்ற ஆசிரியையின் வீடியோ இப்பொது சமூக வலைதளதளங்களில் வைரலாகி வருகிறது.